ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் படையுடன் கைகோர்த்த கனடாவின் ஸ்னைப்பர் வாலி!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், உலகின் மிகவும் அசாத்திய துப்பாக்கி சூடும் திறமை கொண்ட கனடியன் 22ஆவது படைப்பிரிவின் முன்னாள் வீரர் ஸ்னைப்பர் வாலி’ (sniper Wali) உக்ரைனுடன் கைகோர்த்துள்ளார்.


கடந்த சில நாட்களாக தாக்குதல் குறைந்திருந்த நிலையில் இன்று முதல் அதிகரிக்க தொடங்கியது. கீவ் நகரை ரஷ்யாவின் ஏவுகணைகள், குண்டுகள் மீண்டும் தாக்குகின்றன. ரஷ்யா, உக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளதால் தொடர்ச்சியாக போர் நடந்து வருகிறது.


இந்தப் போரில் அணுஆயுதம், உயிரி ஆயுதம் பயன்படுத்தப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இருப்பினும் இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா, உக்ரைன் நாடுகள் மறுத்துள்ளன.


உக்ரைன் ரஷ்யாவின் ராணுவத்தை ஒப்பிடும்போது உக்ரைனின் இராணுவம் சிறியது. இதனால் உக்ரைனுக்கு உதவி செய்யும்படி அதன் ஜனாதிபதி விலாடிமிர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்.

உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்கள், நிதி உதவிகள் செய்து வருகின்றன. இந்நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக றோயல் கனடியன் 22ஆவது படைப்பிரிவின் முன்னாள் வீரர்  ‘ஸ்னைப்பர் வாலி’ களமிறங்கியுள்ளார்.


துப்பாக்கி சுடுதலில் கைதேர்ந்த இவர் ஏற்கனவே 6 ரஷ்ய வீரர்களை சுட்டு கொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இவர் அளித்த பேட்டியில், “நான் உக்ரைனுக்கு உதவ விரும்புகிறேன். ஐரோப்பியாவுடன் உக்ரைன் ஜனாதிபதி நெருக்கம் காட்டுகிறார் என்ற காரணத்துக்காக அவர்கள் மீது ரஷ்யா குண்டுவீசுகிறது. இது நடக்கக் கூடாது” என்றார்.


யார் இந்த ஸ்னைப்பர் வாலி?


கனடாவைச் சேர்ந்த இவருக்கு வயது 40. பிரான்ஸ்-கனடா கணினி விஞ்ஞானியான இவர் புரோகிராமராக பணியாற்றினார். மேலும் கனடாவின் றோயல் கனடியன் 22வது படைப்பிரிவில் துப்பாக்கி சுடும் வீரராக இருந்தார்.
அத்துடன் இவர் 2009, 2011 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் போரில் பங்கேற்றார். அப்போது அவர் குறிவைத்து துப்பாக்கியால் சுட்டு எதிரிகளைக் கொன்று குவித்தார். பெயர் காரணம் இதையடுத்து அவருக்கு வாலி (WALI) எனப் பெயரிடப்பட்டது.
இது அரபிக் மொழியில் காப்பாளர் என பொருள்படும். இவர் தான் தற்போது உலகில் மிகமிக சிறந்த துப்பாக்கி சுடும் வீரராக உள்ளார். மேலும் ஆப்கானிஸ்தான் தவிர சிரியா, ஈராக் போரிலும் இவர் பங்கேற்றுள்ளார்.


ஸ்னைப்பர் வாலி இன் திறமைகள்
2017 ல் ஈராக்கில் ஐஎஸ் பயங்கரவாதியை இவர் 3,450 மீற்றர் தொலைவில் இருந்து சுட்டு வீழ்த்தினார். இவரால் ஒரு நாளில் 40 பேரை வீழ்த்த முடியுமாம். ஒரு நல்ல துப்பாக்கி சுடும் வீரரால் போர் களத்தில் நாள் ஒன்றுக்கு 5 முதல் 6 பேரையும், சிறந்த துப்பாக்கி சூடும் வீரரால் 7 முதல் 10 பேரை மட்டுமே சுட முடியும்.


ஆனால் வாலியின் நேர்த்தி அதை விட அதிகமாக உள்ளது. இத்தகைய திறமை கொண்ட ‘ஸ்னைப்பர் வாலி’ தான் தற்போது ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனில் போரிடவுள்ளதாகத் தெரியவருகிறது.
——————————

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *