ரம்புக்கனையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் விசேட பொலிஸ் குழு விசேட தகவலை வெளியிட்டுள்ளது.
நான்கு ரி-56 ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்தி போராட்டக்காரர்களை பொலிஸார் கட்டுப்படுத்தியதாக அவர்கள் கூறுகின்றனர்.
ரி-56 ரக 35 தோட்டாக்கள் பொலிஸாரால் பயன்படுத்தப்பட்டமையும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட 6 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இன்று (22) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளனர்.
அண்மையில் ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கைகளை வழங்குவதற்காகவே அவர்கள் இங்கு வந்திருந்தனர்.
ரம்புக்கனை சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்த சிவில் செயற்பாட்டாளர்கள் குழு ஒன்று சம்பவ இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வழக்கு இன்று கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதேவேளை, சம்பவத்தில் உயிரிழந்த சமிந்த லக்ஷனின் சடலம் இன்று காலை அவரது வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
————————
Reported by : Sisil.L