யொஹானிக்கு காணி வழங்குவது குறித்து அரசாங்கம் ஆராய்கிறது

மெனிகே மகே ஹித்தே’ பாடலைப் பாடி சர்வதேச அளவில் புகழ்பெற்ற இளம் பாடகி யொஹானி டி சில்வாவுக்கு கொழும்பில் பத்து பேர்ச் காணி ஒன்றை வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.


இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இது தொடர்பான யோசனை முன்வைக்கப்படவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.


புதிய தலைமுறையின் பாடகியாக இலங்கையின் பாடலை சர்வதேச அளவில் கொண்டு சென்றதன் மூலம் அவருக்குக் கிடைத்துள்ள ரசி கர்களின் பாராட்டை கருத்திற்கொண்டும் உலக அளவில் யொஹானிக்கு கிடைக்கப்பெற்ற அங்கீகாரத்தைக் கௌரவிக்கும் வகையிலும் இந்தக் காணி வழங்கப்படவுள்ளது.


1996ஆம் ஆண்டில் உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு பத்தரமுல்ல ரொபர்ட் குணவர்தன மாவத்தையில் வழங்கப்பட்ட காணிகளுக்கு அருகில் யொஹானிக்கும் காணி வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *