40,000 மெற்றிக் தொன் யூரியா உரத்தை ஏற்றிய உரக்கப்பல் சற்று முன்னர் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்த உரம் இன்று (09) இறக்கப்பட்டு, நாளை (10) இந்திய உயர்ஸ்தானிகரால் விவசாய அமைச்சரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.
இந்த உர விநியோகம் நாளை முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படும் என விவசாய அமைச்சர் அறிவித்துள்ளார்.
———————
Repoted by : Maria.S