தென்மராட்சி – மீசாலையில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறையில் வர்த்தகர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். மீசாலைக்கும் சாவகச்சேரிக்கும் இடைப்பட்ட ஐயா கடையடிப் பகுதியில் நேற்றிரவு 8.00 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் அந்தப் பகுதியில் அழகுசாதன வர்த்தக நிலையம் நடத்தும் 35 வயது வர்த்தகர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசார
ணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
—————
Reported by : Sisil.L