யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பில் இரு வியாபார ஆலோசனை அமர்வுகளை நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது. வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு வியாபார ஆயுள் சுழற்சி முகாமைத்துவ வழிகாட்டல்கள் மற்றும் நிதி ஆலோசனைகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்த அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தற்போதைய பொருளாதார சூழலில் இலாபகரத்தன்மையை பேணி, வியாபாரச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் வியாபாரங்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்குவதாக இந்தத் திட்டம் அமைந்திருந்தது.
பங்குபற்றுநர்களுக்கு விளக்கமளிப்புகளை மேற்கொள்வதற்கான இரு வளவாளர்களின் பங்கேற்புடன் அமர்வுகளை வங்கி முன்னெடுத்திருந்தது. இதில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கணக்கீட்டு சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி. ரி. வேல்நம்பி, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அமர்வில் உரையாற்றியிருந்ததுடன், கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொருளியல் பேராசிரியர் கலாநிதி. கணேஷ் சுரேஷ் மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்விலும் உரையாற்றியிருந்தார்.
வியாபார ஆலோசனை அமர்வின் போது, சகல நவீன யுக வியாபார செயற்பாடுகளில் வியாபார ஆயுள் சுழற்சி முகாமைத்துவம் மற்றும் நிதி ஆலோசனை சேவைகள் தொடர்பில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி கவனம் செலுத்தியிருந்ததுடன், வங்கியின் திரண்ட தயாரிப்பு வழங்கல்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பிரத்தியேக நிதிசார் மற்றும் வாழ்க்கை முறை அனுகூலங்கள் பற்றிய விளக்கங்களை பெற்றுக் கொடுத்து, அதனூடாக, வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களைச் சேர்ந்த வங்கியின் வியாபார வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் ஒன்றிணைப்புடன் ஆதரவுகளைப் பெற்றுக் கொடுத்திருந்தது.
நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வியாபாரங்களுக்கு, தமது செயற்பாட்டு மற்றும் நிதித் தேவைப்பாடுகளுக்கு பொருத்தமான தயாரிப்பு வழங்கல்களை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். நிகழ்வில் விளக்கமளிக்கப்பட்டதற்கமைய, அவ்வாறான வழங்கல்களில், மாறுபடுத்தப்பட்ட வகைப்படுத்திய நடத்தை, சிறந்த தொழிற்படு மூலதன நிதித் தீர்வுகள் மற்றும் நவீன வசதிகள் படைத்த டிஜிட்டல் தீர்வுகளினூடாக வியாபார வினைத்திறனையும் உற்பத்தித்திறனையும் மேம்படுத்தும் சேவைகள் போன்றன அடங்கியுள்ளன.நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் வணிக வங்கியியல் பிரிவின் நிறைவேற்று உப தலைவர் அரோஷ லியனாரச்சி கருத்துத் தெரிவிக்கையில், “தளம்பல்கள் நிறைந்த இலங்கையின் பொருளாதாரச் சூழலிலும், எமது நிபுணத்துவத்தினூடாக எமது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்தும் சுபீட்சமாக இயங்குவதற்கு அவசியமான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். நாளாந்த வியாபார செயற்பாடுகள் முதல், புத்தாக்க தொழில்முயற்சியாண்மை மற்றும் புதிய வியாபார சிந்தனைகளை பின்தொடர்வது போன்ற விசேடத்துவம் வாய்ந்த பிரிவுகள் வரை, நிலைபேறான வியாபார வளர்ச்சி மற்றும் நீண்ட கால அடிப்படையிலான வழிமுறையில் சிறந்த பங்காளராக நாம் திகழ்வோம்.” என்றார்.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் வணிக வங்கியியல் பிரிவில் தனது பிரசன்னத்தை மேம்படுத்தும் வகையில், வியாபார ஆலோசனை அமர்வை முன்னெடுத்திருந்த மூன்றாவது சந்தர்ப்பமாக யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வுகள் அமைந்திருந்தன. முன்னர், கொழும்பு மற்றும் குருநாகல் பகுதிகளில் இது போன்ற அமர்வுகளை வங்கி முன்னெடுத்திருந்தது. நாட்டின் சகல பாகங்களிலும் பரந்து காணப்படும் வியாபார வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியினால் சேவைகள் வழங்கப்படுகின்றன. இலங்கையின் சில முன்னணி வியாபாரங்களினால் வங்கியினால் வழங்கப்படும் இந்த பிரத்தியேக சேவைகள் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Reported by :Maria.S