யாழ்.சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒன்பது மாத பெண் குழந்தை ஒன்று உயிரிழந்த நிலையில் கொரோனாத் தொற்றுள்ளமை சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த – யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த குழந்தையே இவ்வாறு தொற்றால் உயிரிழந்தது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூட அறிக்கையிலேயே இந்தத் தகவல் வெளியானது.
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றால் குழந்தை ஒன்று உயிரிழந்தமை இதுவே முதல் முறையாகும்.
————Reported by : Sisil.L——