யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 19 தொற்றாளர்கள் உட்பட வடக்கு மாகாணத்தில் நேற்று மட்டும் 23 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட் டனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் ஆய்வு கூடத்தில் நேற்று 688 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோ தனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்படி, கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 8 பேருக்கும், யாழ். போதனா மருத்துவமனையில் 4 பேருக்கும், சாவகச்சேரி மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்கும் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் 2 பேருக்கும், யாழ். மாநகரில் ஒருவருக்கும், நொதேர்ன் தனியார் மருத்துவமனையில் ஒருவருக்குமாக 19 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதேபோன்று, மன்னார் பொது மருத்துவமனையில் 2 பேருக்கும், முல்லைத்தீவு பொது மருத்துவ மனையில் 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இது தவிர, வசாவிளான் தனிமைப் படுத்தல் முகாமில் 3 பேருக்கும், யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடத்தின் தகவலின்படி பரந்தன் தனிமைப்படுத்தல் முகாமில் 4 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
———————–
Reported by : Sisil.L