யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மேலும் மூவர் கொவிட்-19 நோயால் உயிரிழந்தனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த புத்தூர் கிழக்கைச் சேர்ந்த 62 வயது ஆண் ஒருவரும், கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 57 வயது ஆண் ஒருவரும், பருத்தித்துறையைச் சேர்ந்த 75 வயது பெண்ணுமாக மூவர் இறந்தனர்.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 185ஆக உயர்வடைந்தது.
————-
Reported by : Sisil.L