யாழில் நேற்று கொரோனாவால் இருவர் உயிரிழப்பு

யாழ்.குடாநாட்டில் நேற்று இருவர் கொவிட்-19 தொற்றால் மரணமாகினர்.  யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 63 வயது நபர் ஒருவரும், நவாலியைச் சேர்ந்த 42 வயது நபர் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்தனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த 63 வயது நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த நபரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.


கடந்த சில நாட்களாக யாழ். மாவட்டத்தில் கொவிட்-19 உயிரிழப்புகள் இல்லாதிருந்த நிலையில் நேற்று மட்டும் இரு கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
————–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *