யாழில் நேற்று ஆசிரியர்கள் வாகனப் பேரணி போராட்டம்

சம்பள முரண்பாட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தியும், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு கோரியும் ஆசிரியர்களால் யாழ்ப்பாணத்தில் நேற்று வாகனப் பேரணிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ். முற்றவெளியில் இருந்து ஆரம்பித்து, யாழ். நகர வீதி வழியாக மாவட்ட செயலகம் வரையில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது.
வாகனப் பேரணி ஆரம்பமாகி நகரை அடைந்தபோது பொலிஸார் மற்றும் சுகாதாரப் பிரிவினர் தற்போதைய நாட்டு நிலைமையில் இந்தப் பேரணியை நடத்த முடியாது எனத் தடுத்து நிறுத்தினர்.


எனினும், தாம் சுகாதார ஒழுங்கு விதிகளைப் பின்பற்றியே பேரணியை நடத்துவதாகக் கூறி ஆசிரியர்கள் பேரணியைத் தொடர்ந்தனர்.
இதில் 500 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
—————-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *