யாழில் இருவரும் கிளிநொச்சியில்ஒருவரும் கொரோனாவால் மரணம்

யாழ்ப்பாணம் கொட்டடியில் கோயில் வாசலில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த பெண் உட்பட யாழ்ப்பாணத்தில் இருவரும், கிளிநொச்சியில் ஒருவருமாக இரு மாவட்டங்களிலும் நேற்று கொரோனா தொற்றால் மூவர் மரணித்தனர். யாழ். போதனா மருத்துவமனை ஆய்வக அறிக்கையிலேயே இந்த விடயம் நேற்றுவெளியானது.

 மேலும், மயங்கி வீழ்ந்து உயிரிழந்தவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 68 வயது பெண்ணாவார். தவிர, யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவால் மாதிரிகள் அனுப்பப்பட்ட 84 வயது மூதாட்டியும் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் என்று தெரிய வருகின்றது.

இதேபோன்று, கிளிநொச்சியில் உயிரிழந்த 78 வயது பெண்ணுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

 இதேவேளை, நேற்று ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 262 பேரில் 33 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 பேருக்கும் மன்னாரில் ஒருவர், கிளி நொச்சியில் ஒருவர் காங்கேசன்துறை கடற்படையில் இருவர், மன்னார் கடற்படையில் ஒருவர் இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.    
—————
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *