மே 9 காலிமுகத் திடல் வன்முறைகள் தொடர்பில் மஹிந்த கஹந்தகம கைது

கடந்த மே 09ஆம் திகதி காலிமுகத் திடலில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பான வழக்கில் சந்தேக நபராக குறிப்பிடப்பட்டிருந்த கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம, குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் சந்தேக நபராக குறிப்பிடப்படுவார் என குற்றப் புலனாய்வுப் பிரிவின் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அயேஷா ஜினசேன நேற்று (01) நீதிமன்றத்தில் தெரிவித்தார்.


இந்த வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக்க உள்ளிட்ட 13 பாராளுமன்ற உறுப்பினர்களும் கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் நேற்று (01) ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
———————–

Reported by :Anthonippillai.R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *