நாட்டில் மேலும் 98 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 919 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் உயிரிழந்த 98 பேரில் 54 ஆண்களும், 44 பெண்களும் அடங்குகின்றனர் என்றும் அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
—————–
Reported by : Sisil.L