மூன்று வேளையும் சாப்பிட்டு நலமுடன் வாழ்ந்த மக்கள் இன்று அநாதரவாக உள்ளனர் : சஜித்

மூன்று வேளையும் சாப்பிட்டு நலமுடன் வாழ்ந்த மக்கள் மிகவும் அநாதரவாகி விட்டதாகவும், உரத்தை தடை செய்த அரசாங்கம் அதனைப் பயிரிட்ட மக்களின் வருமானத்தை அழித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


தொழிற்சாலைகள் மூடப்படும் நிலையும், இன்று எமது நாட்டுக்கு வரும் அந்நிய நேரடி முதலீடும் குறைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 
இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் அரசாங்கத்தின் பதில் ‘கொரோனா’ என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர், கொரோனா பேரழிவின் மத்தியில் எழுச்சி பெற்ற நாடுகள் இருப்பதை அரசாங்கம் மறந்து விட்டதாகக் கூறினார்.


ஹம்பாந்தோட்டை முல்கிரிகல தொகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் மித்தெனிய தலைமை அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார்.


கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சிக்கு வந்த பின்னர் இலட்சாதிபதிகள் மற்றும் கோடீஸ்வரர்களுக்கு வரிச்சலுகைகளை வழங்கிய அரசாங்கமே இந்த மோசமான வீழ்ச்சிக்குக் காரணம் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஏறக்குறைய அனைத்து சர்வதேச நிதி மதிப்பீடுகளாலும் நாடு அதிக ஆபத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
————–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *