எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்க முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
அதன்படி முதல் கிலோமீற்றருக்கான கட்டணம் ரூ.80 ஆகவும், மேலதிக ஒவ்வொரு கிலோமீற்றருக்கும் ரூ.70 ஆகவும் உயர்த்தப்படவுள்ளது.
எரிபொருள் விலைகள் 350 ரூபாவைத் தாண்டும் வரை அறிவிக்கப்பட்ட விலைகள் நிலையானதாக இருக்கும் என அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான சுதில் ஜயருக் தெரிவித்தார்.
நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வரிசையில் நின்று எரிபொருளைப் பெறுவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு விலை அதிகரிப்பு அவசியமானது எனவும் அவர் தெரிவித்தார்.
அதிகரித்து வரும் செலவீனங்களுடன் ஒப்பிடுகையில் பொதுமக்களுக்கு நியாயமான விலையேற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
————————–
Reported by : Sisil.L