மருந்துகளின் விலையை  அதிகரிக்குமாறு கோரிக்கை

மருந்துகளின் விலையை மேலும் 20% அதிகரிக்குமாறு மருந்து இறக்குமதியாளர்கள் சபை, மருந்து உற்பத்தி மற்றும் விநியோக இராஜாங்க அமைச்சுக்கு நேற்று (28) அறிவித்துள்ளது.


டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு 300 ஆக உயர்ந்துள்ளதால் மருந்துகளின் விலையை அதிகரிக்க வேண்டும் என மருந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 
விலை உயரவில்லை என்றால் விலைக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 
அறுபது மருந்துகள் தற்போது விலைக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டுள்ளன.


இரு வாரங்களுக்கு முன்னர், மருந்துகளின் விலையை 29% உயர்த்த சுகாதார அமைச்சு ஒப்புதல் அளித்தது. அதன்படி, பரசிட்டமோல் மாத்திரை ரூ.1.59ல் இருந்து ரூ.3 ஆக உயர்ந்தது. எனினும், தற்போதைய நிலைமை தொடர்பில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நாளை (30) விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக மருந்து உற்பத்தி மற்றும் விநியோக இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
——————–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *