மன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் 35 தொற்றாளர்கள் அடையாளம்

மன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 35 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதனால் அந்தக் கிராமத்தை தனிமைப்படுத்த கோரிக்கை முனவைக்கப்பட்டுள்ளது.

மன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் கடலுணவுத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்கள் அதிகளவில் உள்ளதால் அங்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 35 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் மன்னார் 70 கிராம அலுவலர் பிரிவு கிராமத்தை தனிமைப்படுத்த கோரிக்கை மாவட்டச் செயலாளர் ஊடாக கோவிட்-19 தடுப்புச் செயலணிக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.
———————–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *