மட்டு. அநாதை இல்லம் ஒன்றில் 23 சிறார்கள் கொரோனாவால் பாதிப்பு

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள களுதாவளை பிரதேசத்தின் அநாதை இல்லம் ஒன்றின் 23 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

 இல்லத்தின் 33 சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் சோதனையில் இது உறுதிப்படுத்தப்பட்டதாக மட்டக்களப்பு பிராந்திய  சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்.மயூரன் தெரிவித்தார்.

 
அதன்படி ஆபத்து காரணமாக அநாதை இல்லம் தற்காலிகமாக மூடப்பட்டு குறித்த குழுவினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
——————

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *