மக்கும் தன்மையற்ற லஞ்சீற்றுக்கு இன்று முதல் தடை

பொலித்தீன் மூலம் தயாரிக்கப்படும் மக்கும் தன்மையற்ற லஞ்சீற் உற்பத்திக்கும், பாவனைக்கும் மற்றும் விநியோகிப்பதற்கும் இன்று முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளதாகச் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மக்கும் தன்மையற்ற லஞ்சீற்றுகளால் சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கு ஏற்படும் பாதகமான விளைவுகளைக் கருத்திற் கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.

குறித்த சட்டத்தை மீறுவோர் தொடர்பாக சுற்று வளைப்பு இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
———–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *