மக்களின் அதிகரித்த நடமாட்டத்தால் பயணக்கட்டுப்பாடுகள் நீடிக்கப்படலாம்: வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன

நாட்டில் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படா விட்டால் பயணக் கட்டுப்பாடுகளை மேலும் நீடிக்க வேண்டி ஏற்படலாம்
என்று இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.


சமூகத்தில், மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், அமுலில் உள்ள கட்டுப்பாடுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்ற குழப்பம் எழுந்துள்ளது எனவும் அவர் ஊடகங்களிடம் கூறினார்.


அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டால், மீண்டும் கொரோனாத் தொற்று சடுதியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே, பயணக் கட்டுப்பாட்டைக் கடுமையாக்கி, தேவையற்ற நடமாட்டங்களைக் குறைப்பதோடு கண்காணிக்கவும் வேண்டும்.


இலங்கையில் தினசரி தொற்று எண்ணிக்கை 2 ஆயிரத்தை விடவும் அதிகமாகப் பதிவாகி வரும் நிலையில் நாடு ஆபத்தான கட்டத்தில் இல்லை என்று நாங்கள் கூற முடியாது.


நாட்டில் தொற்று நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க நாம் அனைவரும் முடிந்த பங்களிப்பைச் செய்ய வேண்டும்” – என்றார்.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *