இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களால் ஏற்பட்ட சேதம் சுமார் 205 மில்லியன் ரூபா என சட்டமா அதிபர் கொழும்பு கோட்டை நீதவானிடம் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி பிரதமராக இருந்த போது அவர் பயன்படுத்திய உத்தியோகபூர்வ காருக்கு சுமார் 191 மில்லியன் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்துக்கு சேதம் விளைவிக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை எனவும் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
———–
Reported by :Maria.S