போக்குவரத்து துறையில் அதிக எண்ணிக்கையானஇலங்கையர் வேலை இழக்கும் அபாயம்

கட்டண அட்டை அறிமுகம் காரணமாக சுமார் 20,000 தனியார் பஸ் நடத்துனர்கள் வேலை இழப்பர் என அகில இலங்கை தனியார் பஸ் நிறுவனங்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.


கட்டண அட்டை அறிமுகம் மற்றும் நடத்துனர் இன்றி பேருந்துகளை இயக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டால் இந்த நிலை ஏற்படும் என அதன் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.


இதனால் பெருமளவிலான மக்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாது போவதுடன், பேருந்து உரிமையாளர்கள் மட்டுமின்றி பயணிகளும் சிரமத்துக்கு உள்ளாவார்கள் என பிரியஞ்சித் தெரிவித்தார்.


இத் தீர்மானத்துக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும் எனவும், பஸ்கள் வீதியில் இருந்து அகற்றப்பட்டு மாவட்ட மட்டத்தில் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


முன்னோடித் திட்டமாக ஜனவரி இரண்டாம் வாரத்திலிருந்து மேல் மாகாணத்தில் கட்டண அட்டையை நடைமுறைப்படுத்த போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
————-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *