பேருவளை பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் திரிபால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத், மக்களின் பொறுப்பற்ற செயற்பாடுகள் நாட்டின் நிலைமையை மேலும் மோசமாக்கக் கூடும் என தெரிவித்தார்.
பேருவளை மனிங் சந்தையில் ஃபைஸர் ஊசி மருந்தை வழங்கும் வேலைத்திட்டம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட போதும் பொதுமக்கள் முன்வரவில்லை என மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு மக்களின் ஒத்துழைப்பை பெறாவிட்டால் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் ஆபத்தான நிலைமைக்கு முகங்கொடுக்க நேரிடும் என அவர் குறிப்பிடுகின்றார்.
இது இறுதியில் நாடு மீண்டும் மூடப்படும் நிலைக்கு இட்டுச் செல்லும் எனவும் அதனால் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியானது நாட்டை மீள முடியாத அளவுக்கு மோசமாக்கலாம் எனவும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
—————–
Reported by : Sisil.L