நிலவும் எரிபொருள் பிரச்சினையால் அடுத்த சில நாட்களில் பேக்கரி தொழில் முற்றாக வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பேக்கரி தொழிலுக்குத் தேவையான எரிபொருள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.
பேக்கரி தொழிலுக்கு தேவையான எரிபொருளை வழங்குமாறு அனைத்து பேக்கரிகளும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் என்.கே.ஜயவர்தன மேலும் தெரிவித்தார்.
——————–
Reported by:Anthonippillai.R