புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பும் டொலருக்கு  240 ரூபா வழங்கவும் : அமைச்சர் நிமல்

புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் ஒவ்வொரு டொலருக்கும் ரூ. 240 ரூபாவை வழங்குமாறு திறைசேரியிடம் தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.


இன்று (08) பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.


இந்நிகழ்வில் தொழில் அமைச்சர் நிமல் ஸ்ரீபால சில்வா உரையாற்றினார்.


வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இந்த நாட்டுக்கு அனுப்பும் டொலருக்கு குறைந்தபட்சம் 240 ரூபா செலுத்துமாறு திறைசேரியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.


மேலும், எனது அமைச்சு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு  ஓய்வூதிய திட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளது.


வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்கு 15,000 அமெரிக்க டொலர் காப்புறுதி வழங்குவதை கட்டாயமாக்கும் பணியும் நடந்து வருகிறது என்றார்.
————-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *