புலம்பெயர்ந்து வருவோருக்காக கனடிய அரசின் புதிய திட்டம்

கடந்த ஆண்டில் கொரோனாவால் வேலை இழந்தவர்களுக்கு மீண்டும் வேலை கிடைத்ததைப் போல அன்றி, இந்த ஆண்டில், புதிதாக கனடாவுக்கு வருபவர்களுக்கு பெருமளவில் வேலை வழங்க கனடா திட்டமிட்டுள்ளது.


எல்லைக் கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டு, வெளிநாட்டு மாணவ மாணவிகள் கனடாவுக்குத் திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசு, இந்த ஆண்டில் புலம்பெயர்வோர் எண்ணிக்கையை புதிய மட்டத்துக்கு உயர்த்த திட்டமிட்டுள்ளது.


டிசம்பரில் 57,400 பேருக்கு புதிதாக வேலை வாய்ப்பளித்து தனது பொருளாதாரத்தை இரட்டிப்பாக்கியது கனடா. அதைத் தொடர்ந்து, கடந்த நவம்பரில் 6.0 சதவீதமாக இருந்த வேலையின்மை வீதம், 22 மாதங்களில் இல்லாத அளவுக்கு டிசம்பரில் 5.9 சதவீதமாகக் குறைந்தது.


பகுதி நேர வேலை பார்த்து வந்த பலர் நிரந்தர வேலைகளுக்குத் திரும்ப, முழு நேர வேலைகளின் எண்ணிக்கை 1,23,000ஆக உயர்ந்தது.
சென்ற ஆண்டில் கொரோனா காலகட்டத்தில் வேலையிழந்தவர்கள் வேலைக்குத் திரும்பியதைப் போல இல்லாமல், இந்த ஆண்டில், புதிதாக புலம்பெயர்ந்து வருவோருக்கு பெருமளவில் வேலை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


சர்வதேசப் பயணக் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து, குறைந்திருந்த புலம்பெயர்வோரின் எண்ணிக்கை, கடந்த சில மாதங்களாக கொரோனா காலகட்டத்துக்கு முந்தைய நிலையை எட்டி வருகிறது.


குறிப்பாக, முறையான தொழில், அறிவியல் சார்ந்த மற்றும் தொழில்நுட்ப சேவைப் பிரிவுகளில் அதிகமானோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளார்கள் (சுமார் 26,000 பேர்). அதேபோல், மொத்த வர்த்தகம் மற்றும் சில்லறை வர்த்தகம் ஆகிய பிரிவுகளில் சுமார் 20,000 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளார்கள்.


கனடா 2021ஆம் ஆண்டில் இலக்கான 401,000 புதிய நிரந்தர வாழிட உரிமம் பெற்றோர் என்னும் இலக்கை அடைந்துவிட்ட நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசு, 2022ஆம் ஆண்டில் 411,000 புலம்பெயர்வோரை வரவேற்க இலக்கு நிர்ணயித்துள்ளது.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *