புத்தாண்டுக் கொண்டாட்டங்களை ரத்து செய்த கனடிய நகரங்கள்

கனடாவின் முதன்மை நகரங்கள் பல இந்த முறையும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை ரத்து செய்து, இணையமூடாக எளிமையாகக் கொண்டாட முடிவு செய்துள்ளன.


கனடா முழுவதும் இந்த முறையும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் இணையமூடாக முன்னெடுக்கப்படுகின்றன. இந்தப் புத்தாண்டை கொரோனா மாறுபாடான ஒமிக்ரோன் பரவலுடன் கனேடிய மக்கள் கொண்டாடுகின்றனர்.


பொதுவாக Nathan Phillips சதுக்கத்தில் திரண்டு புத்தாண்டை கோலாகலமாகக் கொண்டாட வேண்டிய தருணத்தில், தற்போது முன்னரே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் இணையமூடாக ஒளிபரப்பப்படுகின்றன.


ரொறன்ரோ மக்கள் கொரோனா பரவலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு, புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் அனைத்தும் இணையமூடாக முன்னெடுக்கப்படுகிறது. Nathan Phillips சதுக்கம் அல்லது CN டவரில் இந்த முறை வாணவேடிக்கை நடத்தப்படாது என்றே கூறப்படுகிறது.


ஆனால் ரொறன்ரோ ஏரி அருகில் முன்னெடுக்கப்படுவதாகவும், மக்கள் எங்கிருந்தாலும் இந்த நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.


முன்கள ஊழியர்களுக்கு ஆதரவாக குறித்த நிகழ்ச்சிகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. இதனிடையே Mississauga நகரில் இந்தமுறை எந்தவித கொண்டாட்டங்களும் இருக்காது என்றே அறிவிக்கப்பட்டுள்ளது.


பிரிட்டிஷ் கொலம்பியாவில் கூட்ட எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உள்ளனர். உள் அரங்கத்தில் ஒன்று திரளும் மக்களில் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக முழுமையாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
—————
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *