கல்யாணி தங்க நுழைவாயில் எனப்படும் புதிய களனிப் பாலத்தின் திறப்பு விழா இன்று (24) பிற்பகல் நடைபெற்றது.
இந்தப் பாலம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.
உயர் தொழில்நுட்பக் கேபிள்களில் இலங்கையில் முதன்முறையாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய பாலம் ‘கல்யாணி ரண் பிவிசும’ என அழைக்கப்படுகிறது.
களனி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள இப்பாலத்தின் நீளம் 380 மீற்றர்களாகும்.
Reported by : Sisil.L