புதிய எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது

எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை உள்நாட்டு சந்தைகளுக்கு புதிய எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், இலங்கையில் வசிக்கும் அவர்களது உறவினர்களுக்காக புதிய எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் நடைமுறையின் காரணமாக அவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதே இதற்கு காரணமாகும். 

நாடு எதிர்நோக்கியுள்ள டொலர் நெருக்கடிக்கு தீர்வாக லிட்ரோ நிறுவனம் அண்மையில் இந்த நடைமுறையை அறிமுகப்படுத்தியது.

அதற்கமைய, வெளிநாடுகளில் உள்ள சில இலங்கையர்கள் டொலரை செலுத்தி புதிய சிலிண்டர்களை முன்பதிவு செய்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மக்கள் எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துவதன் காரணமாக, நாளாந்த எரிவாயு தேவை சற்று குறைவடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Reported by:Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *