பிரான்ஸ் பிரதமருக்கு கொரோனா பாதிப்பு

பிரான்ஸ் பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.


ஐரோப்பா முழுவதும் கொரோனோவின் நான்காம் அலை பரவி வரும் நிலையில் பிரான்ஸில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. பிரான்ஸ் நாட்டின் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ். 56 வயதான இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் அவர் அடுத்த 10 நாட்கள் வீட்டில் இருந்தபடியே தனது பணிகளை மேற்கொள்வார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


அரசு முறைப் பயணமாக அண்டை நாடான பெல்ஜியமுக்குச் சென்றுவிட்டு நாடு திரும்பிய நிலையில் ஜீன் காஸ்டெக்ஸ்க்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.


இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து மருத்துவர்கள் கொடுத்த ஆலோசனையால் அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.


அடுத்த 10 நாட்களுக்கு அவர் வீட்டில் இருந்தபடியே தனது பணிகளை மேற்கொள்வார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.  
——————-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *