தற்போது ஐரோப்பிய நாடுகளில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள குரங்கு அம்மை (Monkey pox) பரவல், பிரான்சிலும் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தவகையில் பிரான்சில் இதுவரையில் ஏழு பேருக்கு இந்தத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, கொவிட் 19 வைரஸை கண்டறிவதற்கு பயன்படுத்தப்பட்ட PCR முறையை வைத்து இந்த குரங்கு அம்மை நோயைக் கண்டறிய முடியும் எனவும், மிகத் துல்லியமான முடிவுகளை இந்த PCR அறிக்கை சமர்ப்பிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இறுதிக் கட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ள உலக சுகாதார நிறுவனம் (WHO) மிக விரைவில் பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு இந்த முறையை பரிந்துரை செய்ய உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
——————–
Reported by:Anthonippillai.R