KK என அறியப்படும் பிரபல பின்னணி இசைப் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் தமது 53ஆவது வயதில் நேற்றிரவு(31) காலமானார்.
பிரபல பாடகரான KK, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளிலும் பாடியுள்ளார்.
மின்சாரக் கனவு படத்தில் “ஸ்ரோபரி பெண்ணே”, உயிரோடு உயிராக படத்தில் “பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது”, செல்லமே படத்தில் “காதலிக்கும் ஆசையில்லை”, காக்க காக்க திரைப்படத்தில் “உயிரின் உயிரே”, 7G ரெயின்போ காலனி திரைப்படத்தில் “நினைத்து நினைத்துப் பார்த்தேன்”, மன்மதன் திரைப்படத்தில் “காதல் வளர்த்தேன்” போன்ற பிரபலமான பாடல்களை தமிழ் திரையுலகுக்குத் தந்துள்ளார் கிருஷ்ணகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.
1968 ஆம் ஆண்டு டில்லியில் பிறந்த கிருஷ்ணகுமார் குன்னத், 1999ஆம் ஆண்டில் தனது முதலாவது அல்பம் பாடலை (Pal) வெளியிட்டிருந்தார்.
அன்னாரின் மறைவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் திரையுலகத்தினர் இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.
கல்கத்தாவில் நேற்று(31) இடம்பெற்ற கல்லூரி கலாசார நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த போது, கிருஷ்ணகுமார் குன்னத்துக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
————————–
Reported by:Anthonippillai.R