பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கேட்டுக்கொள்ளவுள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதிய பிரதமருக்கு வழி விடுவதற்காக மகிந்த ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என ஜனாதிபதி வேண்டுகோள் விடுப்பார் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரதமரும் அமைச்சரவையும் பதவி விலகிய பின்னர் புதிய அமைச்சரவையை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி ஏற்கனவே ஆளும் கட்சியின் அதிருப்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.
நான் பதவி விலக மாட்டேன்; என்னை விரும்பினால் பதவி நீக்கம் செய்யலாம் என பிரதமர் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
எனினும் பிரதமரை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்வாரா என்பது இன்னமும் தெளிவாகவில்லை.
பிரதமரை பதவியிலிருந்து அகற்றாவிட்டால் அது நாட்டில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் என அதிருப்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை எதிர்க்கட்சி ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
Reported by : Sisil.L