இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ பால்மாவின் விலையை 300/- ரூபாவால் அதிகரிக்க பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் பரிசீலித்து வருகிறது.
400 கிராம் பால்மா பக்கெற்றின் விலையை 120/- ரூபாவால் அதிகரிக்க கலந்துரையாடப்பட்டு வருவதாக சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உலகச் சந்தையில் ஒரு தொன் பால்மாவின் விலை 5,500 அமெரிக்க டொலராக உயர்ந் துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான நிலையில் உள்ளூர் சந்தையில் பால்மாவின் விலையை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் நிதி அமைச்சு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பால்மாவுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இறக்குமதியாளர்கள் பால்மாவின் விலையை அநியாயமாக உயர்த்தினால், நுகர்வோருக்கு நியாயம் கிடைக்கத் தலையிடுவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Reported by : Sisil.L