டோக்கியோவில் அவசரகால நிலை இன்று(12) முதல் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் பார்வையாளர்களின்றி நடைபெறும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானில் தற்போது நிலவும் கொவிட் அபாய நிலையைக் கருத்தில் கொண்டே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 நேரத்தில் 920 கொவிட் நோயாளர்கள் டோக்கியோவில் பதிவாகியுள்ளனர். அதன்படி டோக்கியோவில் அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை டோக்கியோ ஒலிம்பிக்கின் ஆரம்ப வைபவம் பிரதம விருந்திந்தினருக்காக மட்டும் திறக்கப்படவுள்ளது.
Reported by : Sisil.L