பல நதிகளின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

இன்று காலை 150 மி.மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சியைத் தொடர்ந்து களனி, களு,ஜின் மற்றும் நில்வளா நதிகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. எனவே அந்நதிகளைச் சூழவுள்ள பகுதிகளில் சிறிய வெள்ள அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 
அடுத்த 24 மணி நேரத்தில் களனி நதியின் தாழ்நிலப்பகுதிகளான தெஹியோவிற்ற, ருவன்வெல்ல, சீதாவாக்கை, தொம்பே, கடுவல, பியகம, கொலன்னாவ மற்றும் வத்தளை பிரதேச செயலகப் பிரிவுகளில் சிறு வெள்ளம் ஏற்படக்கூடும்.
களுகங்கையின் தாழ்வான பகுதிகளான இரத்தினபுரி, குருவிட்ட, கிரிஎல்ல, அயகம மற்று எலபாத்த பிரதேச செயலகப் பிரிவுகளும் இதை எதிர்கொள்ளக்கூடும்.

 
இத்தீவிர காலநிலை சூழலில் ஏற்படும் அபாயங்களைக் குறைக்க தடுப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
————————
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *