பருத்தித்துறையில் 51 பேர் உட்பட யாழ். மாவட்டத்தில் 91 பேருடன், வடக்கில் 103 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகம், யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடங்களில் நேற்று நடத்தப்பட்ட பரிசோதனைகளிலேயே இந்தத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். யாழ். பல்கலைக்கழகத்தின் ஆய்வு கூட பரிசோதனை அறிக்கையின்படி,246 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் பருத்தித்துறையைச் சேர்ந்த 19 பேருக்கும், யாழ்ப்பாணம் மாநகரைச் சேர்ந்த12 பேருக்கும், சாவகச்சேரியைச் சேர்ந்த 7 பேருக்குமாக 38 பேருக்கு தொற்று அடையாளம் காணப்பட்டது. இதேபோன்று, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் 423 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்படி, பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 29 பேர், நல்லூர் மருத்துவ அதிகாரி பிரிவில் 8 பேர், யாழ். போதனா மருத்துவமனையில் 4 பேர், அளவெட்டி பிரதேச மருத்துவமனையில் 3 பேர், பருத்தித்துறை ஆதார மருத்துவமனை
யில் 3 பேர், மானிப்பாய் பிரதேச மருத்துவமனையில் 3 பேர், தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் ஒருவர், சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் ஒருவர், சண்டிலிப்பாய் மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவர் என யாழ். மாவட்டத்
தில் 53 பேர் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டனர்.
இதேபோன்று, கிளிநொச்சி மாவட்டத்தில், பொது மருத்துவமனையில் 3 பேர்,பூநகரி மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவர் என்று 4 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவர், மன்னார் மாவட்டத்தில் ஒருவர், வவுனியா மாவட்டம் செட்டிகுளம் மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேர் என்று தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்
Reported by : Sisil.L