பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான 4 பேர் விடுவிப்பு!

மட்டக்களப்பு தரவை மாவீரர் இல்லத்தில் நினைவேந்லில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிந்த 4 பேரையும் தலா ஒருவர் ஒரு இலட்சம் ரூபா ஆட்பிணையில் செல்வதற்கு வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று செவ்வாய்க்கிழமை (19) அனுமதியளித்து பிணையில் விடுவித்தார்.

கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி கிரான் பிரதேசத்திலுள்ள தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் இடத்தினை அலங்கரித்த கொடிகள் கம்பங்கள் ஜெனரேற்றர். ஒலி பெருக்கியை என்பவற்றை கழற்றி வாகனத்தில் வீட்டிற்கு எடுத்துக் கொண்டு திரும்பினர்.

இதன் போது சந்திவெளி பிரதேசத்தைச் சேர்ந்த மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டாளரும் முன்னால் புலிகள் அமைப்பைச் சேர்ந்த நிதர்சன் என்றழைக்கப்படும் சின்னத்தம்பி காஞ்சிநிதி, ஒலிபெரிக்கி உரிமையாளரான 43 வயதுடைய பிரான்சிஸ் அன்ரனி நியூட்டன், அவரது மகனான 19 வயதுடைய நியூட்டன் சதுர்சன், வாகனசாரதியான 33 வயதுடைய சண்முகநாதன் நவஜீவன் ஆகிய 4 பேரையும் பயங்கரவாத தடைச்சட்டத்தில் வாழைச்சேனை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 4 பேரையும் தொடர்ந்து விளக்கமறியலில் வக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களை பிணையில் விடுவிப்பதற்கான முன்நகர்வு விண்ணப்ப பத்திரத்தை அவர்கள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் இன்று நீதிமன்றில் விண்ணப்பித்ததை அடுத்து குறித்த வழக்கு விசரணைக்கு எடுத்துக் கொண்ட நிலையில் 4 பேரையும் தலா ஒருவர் ஒரு இலட்சம் ரூபா ஆட்பிணையில் செல்வதற்கு அனுமதி அளித்து நீதவான் பிணையில் விடுவித்தார்.

இதனை அடுத்து அவர்கள் பிணையில் விடுவித்து நீதவான் உத்தரவிட்ட பத்திரத்தை சிறைச்சாலையில் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து அவர்களை சிறையில் இருந்து விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Reported by:S.Kumara

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *