இலங்கையின் கல்வித்துறை வளர்ச்சியில் பாடசாலைகளில் ‘கடமை நிமித்தம் கடமை நிறைவேற்று அதிபர்கள்’ என்ற சொற்றொடரில் பதில் அதிபர்கள் மிக முக்கிய பங்களிப்பு செய்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சீ.டபிள்யூ.டபிள்யூ கன்னங்கர அவர்களி பின்னரான கல்வி முறையில் பாடசாலைகளை தாங்கிப்பிடித்து வந்துள்ளவர்களாக இந்த பதில் அதிபர்களே காணப்படுகிறார்கள். இவ்வாறு பதில் அதிபர்களாகக் கடமையாற்றியவர்களே பெரும்பாலும் இலங்கை அதிபர் சேவைத் தரத்திற்குள் உள்வாங்கப்பட்டார்கள்.
அவர்களில் பலர் அதிபர் தரம் 1. 2 ஆகியவற்றிலும், கல்வி நிர்வாக சேவையிலும் உயர்வு பெற்றவர்களாகவும் பதவியில் உள்ளனர். பலர் ஓய்வு பெற்றுள்ள நிலையில் அவர்களுடைய சேவை குறித்த அவதானத்திலும் பதில் அதிபர்கள் என்ற நிலையில் இருந்தே நோக்கப்பட வேண்டியுள்ளது. 1815/ 31 இலக்க 22.10.2014 ஆம் திகதியஇலங்கை அதிபர் சேவை பிரமாணக் குறிப்பு நடைமுறையிலுள்ள நிலையிலும் இன்று வரையில் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அரச பாடசாலைகளில் மூன்றிலொரு பாடசாலைகள் பதில் அதிபர்களின் நிர்வாகத்தின் கீழே இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் கல்வித்துறையில் தவிர்க்க முடியாத அங்கமாகவே பதில் அதிபர்கள் திகழ்கிறார்கள். கஷ்டப் பிரதேச, அதிகஷ்டப் பிரதேச பாடசாலைகளின் நிர்வாகத்துக்கு பொறுப்பாகவே பதில் அதிபர்கள் சேவையில் உள்ளனர். பதில் அதிபர்கள் இல்லாவிட்டால் பல பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மிக சவாலான சூழ் நிலையில் இவ்வாறான பாடசாலைகளை காப்பாற்றி வருபவர்கள் பதில் அதிபர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பதில் அதிபர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவையை மதித்தும், அவர்கள் கல்விப்புலத்தில் வைத்துள்ள நம்பிக்கையை மதிக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். எனவே இலங்கை அதிபர் சேவை பிரமாணக் குறிப்பில் மாற்றம் கொண்டுவரப்படல் வேண்டும். தற்போதுள்ள அதிபர் பிரமாணக்குறிப்பின்படி நீண்ட காலம் சேவையை வழங்கிய பதில் அதிபர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இப்பாதிப்பு நிலையை உணர்ந்து கொள்கை வகுப்பாளர்கள், தொழிற்சங்கங்கள் தீர்மானத்திற்கு வருதல் வேண்டும். இத்திருத்தங்கள் ஊடாக பதில் அதிபர்களி சேவைகளுக்கு மதிப்பளிக்கும் விடயங்களும் உள்ளீர்க்கப்பட வேண்டும்.
2. 180 நாட்கள் கடமையில் இருந்தால் பதவி விலக்க முடியாது என்ற நியமமும், இவ்விடயம் தொடர்பில் பொதுச்சேவை ஆணைக்குழுவின் சிபாரிசும் கவனத்தில் எடுக்கப்படல் வேண்டும்.
3. மேற்குறித்த பிரமாணக்குறிப்புக்கமைய பரீட்சை மூலமே இவ்வெற்றிடங்கள் நிரப்பப்படல் வேண்டுமானால் பரீட்சைகளை நடத்தியிருக்க வேண்டும். பரீட்சையில் பங்கேற்கும் வாய்ப்பை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக 2019 ஆம் வருடம் தெரிவு செய்யப்படாமல் பரீட்சையில் சித்தி பெறத்தவறியவர்களைக் கொண்டு வாய்ப்பை வழங்க எடுக்கும் முயற்சி பிரமாணக் குறிப்பிற்கு முரணானதே.
5. சுற்றுநிருப இலக்கம் 16/20172017 இன்படி பெப்ரவரி 07 ஆம் திகதியுடைய அமை.ப/17/0105/742/002 இலக்கம் கொண்ட அமைச்சரவை தீர்மானத்திலிருந்து கிடைத்த அனுமதியின் பிரகாரம் அதிகரித்த விசேட கொடுப்பனவு திருத்தம் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. ‘மேற்படி திருத்தம் செய்யப்பட்ட கொடுப்பனவு, அதிபர்களாக சேவையாற்றுகின்ற மற்றும் அப்பதவிகளில் சேவையாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்காக வழங்கப்படுவதோடு அதனை 2017 மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளல் வேண்டும்’ என்ற விடயம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இக்கொடுப்பனவு மத்திய மாகாணம், கிழக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மாறாக மத்திய மாகாணம், கிழக்கு மாகாணங்களில் இக்கொடுப்பனவு வழங்கப்படவில்லை என்பதும் அதிபர்களுக்கான கொடுப்பனவாக வழங்கப்பட்ட ரூபாய் 300 இடைநிறுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இக்கொடுப்பனவு நிலுவைத் தொகையுடன் வழங்கப்படல் வேண்டும்.
Reported by :S.Kumara