நேபாள விமான விபத்து; 21 சடலங்கள் மீட்பு

நேபாள விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இதுவரை 21 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 
மலை உச்சியில் மோதிய பிறகு, விமானத்தின் பாகங்கள்  சுமார் 100 மீட்டர் சுற்றளவில் பரவியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விமானம் 14,500 அடி உயரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.


சடலங்களை மீட்பதற்காக 15 நேபாள இராணுவ வீரர்கள் கொண்ட குழு அந்த இடத்திற்கு அருகில் இறக்கப்பட்டதாக நேபாள இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.


முன்னதாக நேபாளத்தின் பொக்காராவில் இருந்து ஜோம் சோமுக்கு நேற்றுக் காலை 9.55 மணிக்கு  புறப்பட்டுச் சென்ற விமானம் மாயமானது.

 
அந்த விமானத்தில் 4 இந்தியர்கள், 3 ஜப்பானியர்கள். 2 ஜெர்மனியர்கள் உட்பட மொத்தம் 22 பேர் பயணம் செய்துள்ளனர். காணாமல் போன விமானத்தைத் தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர்.


இந்நிலையில், மாயமான விமானம் நேபாளத்தின் மஸ்டாங் அருகே கோவாங் பகுதியில் சிதைவடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

—————————
Reported by :Anthonippillai.R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *