நுவரெலியாவில் ஆசிரிய தொழிற்சங்கப் போராட்டம் காமினி வித்தியாலயத்திலிருந்து இந்தப் போராட்டம் ஆரம்பமானது.
ஆசிரியர், அதிபர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நுவரெலியாவிலும் இன்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பெரும் எண்ணிக்கையிலான ஆசிரியர்கள், அதிபர்கள் இந்தப் போராட்டத்தில் பங்குபற்றினர்.