நிலைமையைப் பொறுத்து எந்நேரமும் நாடு முடங்கலாம் : சுகாதார அமைச்சு

நாட்டை முடக்கத் தீர்மானிக்கப்படவில்லை என்றாலும் நிலைமைகளைப் பொறுத்து  ஒரு சில மணித்தியாலங்களில் தீர்மானங்கள் மாறலாம் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.


நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாடு முடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் சுகாதாரத் தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.


இது தொடர்பிலஅவர் மேலும் தெரிவித்ததாவது:-
‘‘நாட்டில் கொரோனா பரவல் குறித்து கவனம் செலுத்தி வருகின்றோம். கொரோனாக் கட்டுப்பாட்டுச் செயலணியில் தொடரச்சியாக இந்தக் காரணிகளைச் சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டி வருகின்றனர்.


நாட்டை முழுமையாக முடக்குவது குறித்து இன்னமும் கொரோனா செயலணிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவில்லை.


எனினும் இதற்கு முன்னரும் நாளாந்தம் மூவாயிரத்துக்கு அதிகமான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டை முடக்குவது குறித்து ஆரம்பத்தில் தீர்மானிக்காத போதும்  இறுதி நேரத்தில்  நாட்டை உடனடியாக முடக்கத் தீர்மானமும் எடுக்கப்பட்டது.


இப்போதும் அவ்வாறான நிலைமைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
இன்றைய நிலைமை நாளை எவ்வாறு இருக்கும் எனக் கூற முடியாது.அவ்வப்போது ஒரு சில மணித்தியாலங்களில்
தீர்மானங்கள் மாற்றப்படலாம்.


எனவே நாட்டை முடக்குவதற்கான தேவை ஏற்படாத வகையில் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதையே நாமும் கேட்டுக்கொள்கின்றோம்”  என்றார்.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *