நிலைமையைக் கட்டுப்படுத்த இன்னும் 3 வாரங்கள் செல்லும் : இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை
நாள்தோறும் அதிகரித்துள்ள போதிலும், உறுதிப்படுத்தப்படும் தொற்றாளர்களின் நாளாந்த எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது.

எனவே, நாட்டில் தற்போதுள்ள கொரோனாத் தொற்று நிலைமையைக் கட்டுப்படுத்த இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் செல்லும்.”
– இவ்வாறு சுகாதார சேவைகள் தொற்று நோய் மற்றும் கொரோனா
நோய் கட்டுப்பாடு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.

ராகம போதனா வைத்தியசாலையில் ஊடகங்களுக்கு நேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் இப்போது பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது.


மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்களின் கருத்துப்படி இது தேவையானது மற்றும் மிகவும் நல்லது. ஆனால், நாட்டு மக்களுக்கு  இதனால் பல சிரமங்கள் உள்ளன.

எந்தவொரு திட்டத்தையும் முன்னெடுக்கும்போது இவ்வாறு சிக்கல்கள் தோன்றும்” என்றார்.
——————–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *