நியூசிலாந்தின் ஒக்லாந்தில் வணிக வளாகமொன்றில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டு பலரைக் காயப்படுத்தியவரை பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளனர்.
லைன்மோலில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
கத்திக்குத்து சம்பவத்தைத் தொடர்ந்து பெரும் பதற்ற நிலை காணப்பட்டது என சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். கத்திக்குத்து காயத்துடன் ஒருவர் நிலத்தில் விழுந்து கிடைப்பதை நேரில் பார்த்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.
வணிக வளாகத்திலிருந்து பொதுமக்கள் தப்பி வெளியே ஓடுவதைக் காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
வணிக வளாகத்திற்குள் நுழைந்த நபர் பலரை காயப்படுத்தினார் பொலிஸார் அவரை கண்டுபிடித்து துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதில் அவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூவரின் நிலைமை கவலைக்கிடமானதாகக் காணப்படுகின்றது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தாக்குதலை மேற்கொண்டவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்றும் 10 வருடங்களாக நியூஸிலாந்தில் வசித்து வருபவர் என்றும் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புபட்டவர் என்றும் கூறப்படுகிறது.
——————–
Reported by : Sisil.L