நாளை முதல் 7 நாட்களுக்கு பஸ்கள் இயங்குமா என்பது நிச்சயமற்றதாக உள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
டீசல் பற்றாக்குறையால் இவ்வாறான பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாளை (06) நடைபெறவுள்ள 24 மணி நேர ஹர்த்தாலுக்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவளிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
————
Reported by : Sisil.L