நாட்டில் மேலும் 157 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 152 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் உயிரிழந்த 157 பேரில் 87 பெண்களும், 70 ஆண்களும் உள்ளடங்குகின்றனர் என்றும் அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஆண் ஒருவர், 03 பெண்கள் என நால்வர் 30 வயதுக்குட்பட்டவர்களாவர். 06 ஆண்கள், 17 பெண்கள் என 23 பேர் 30 – 59 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். 130 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர் இதில் 63 ஆண்களும் 67 பெண்களும் அடங்குகின்றனர்.
——————–
Reported by : Sisil.L