2016ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டில் தேன் உற்பத்தியாளர்கள் தொடர்பிலோ, தேன் உற்பத்தி தொடர்பிலோ எவ்விதத் தகவலும் சேகரிக்கப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.
பிந்துனுவெவ தேனீ அபிவிருத்திப் பிரிவு இந்தத் தகவல்களைச் சேகரித்திருக்க வேண்டிய போதிலும், அதனை முறையாகச் செய்யவில்லை என விவசாய அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆண்டுக்கு 250 மெட்ரிக் தொன் தேன் நாட்டுக்குத் தேவை, அதில் 75 முதல் 80 மெட்ரிக் தொன் நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது.
நாட்டுக்குத் தேவையான எஞ்சிய தேன் சீனா, இந்தியா, தாய்லாந்து, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
———-
Reported by : Sisil.L