நுரைச்சோலை அனல் மின் நிலையம் முழுவதுமாக செயற்பாட்டுக்கு வரும் வரையில் நாட்டின் சில பகுதிகளில் ஒரு மணித்தியால மின் வெட்டு ஏற்படலாம் என மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, மாலை 6 மணி முதல் இரவு 9 மணிக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் ஒரு மணித்தியால மின் வெட்டு ஏற்படக் கூடும் என அந்தச் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, தடைப்பட்டிருந்த மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் முழுவதுமாக வழமைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
——————–
Reported by : Sisil.L