ஜனாதிபதித் தேர்தலின் நாடளாவிய ரீதியிலான முடிவுகள் வௌியாகியுள்ளன.
அதனடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க 5,634,915 வாக்குகளை பெற்றுள்ளார். 42.31 வீத வாக்குகளை பெற்ற அவர் முன்னிலையில் உள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 4,363,035 வாக்குகளை பெற்றுள்ளார். அது 32.76 வீதமாக காணப்படுகின்றது.
சுயேட்சை வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்க நாடளாவிய ரீதியில் 2,299,767 வாக்குகளை பெற்றுள்ளார். இது 17.27 வீதமாக பதிவாகியுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ஸ 342,781 வாக்குகளை பெற்றுள்ளார். அது 2.57 வீதமாக காணப்படுகின்றது.
இலங்கை ஜனநாயக குடியரசின் 9ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நேற்று(21) நடைபெற்றது.
இந்தநிலையில் எந்தவொரு வேட்பாளரும் 50 வீத வாக்குகளை பெறாத காரணத்தினால் இரண்டாவது விருப்பு வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.
Reported by:S.KUMAR